/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாய் பணிக்காக இடிக்கப்பட்ட சாலை சீரமைப்பு
/
வடிகால்வாய் பணிக்காக இடிக்கப்பட்ட சாலை சீரமைப்பு
ADDED : நவ 10, 2025 11:23 PM

உத்திரமேரூர்: --நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, உத்திரமேரூரில் உடைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. உத்திரமேரூர் பேரூராட்சி, எட்டா-வது வார்டில், மஹாத்மா காந்தி தெரு உள்ளது. இந்த தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த தெருவில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், 20 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 22 ஆண்டுகளுக்கு முன், இந்த தெருவின் இருபுறமும் அமைக்கப்பட்ட வடிகால்வாய் சேதமடைந்து இருந்தது. இதை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி, வடிகால்வாய் சீரமைப்பு பணிக்காக, 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, வடிகால்வாய் சீரமைக்கும் பணிகள், கடந்த ஒரு மாதத்திற்கு முன் துவக்கப்பட்டன. அப்போது, இந்த தெருவில் வடிகால்வாய் சீரமைப்பு பணிக்காக, புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை இடித்து சேதப்படுத்தப்பட்டது.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, வடிகால்வாய் புதுப்பிக்கும் பணியுடன் சேர்த்து, இடிக்கப்பட்ட புதிய கான்கிரீட் சாலையை சீரமைக்கும் பணியும் நேற்று நடந்தது.

