/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எலும்புக்கூடான மின்கம்பம் சீரமைப்பது எப்போது?
/
எலும்புக்கூடான மின்கம்பம் சீரமைப்பது எப்போது?
ADDED : நவ 10, 2025 11:24 PM

உ த்திரமேரூர் பேரூராட்சி, காக்கநல்லுார் செல்லும் சாலையோரம் உள்ள விளை நிலங்களில், மின்வாரியத் துறை சார்பில் மின் கம்பங்கள் நடப்பட்டு, விவசாய 'பம்ப் செட்'டுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்குள்ள மின்கம்பம் ஒன்று முறையாக பராமரிப்பு இல்லாமல், கான்கிரீட் பூச்சு உதிர்ந்து எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறது.
மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில், மின்கம்பம் முறிந்து விழுந்து, அப்பகுதியில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின்கம்பத்தை உடனே மாற்ற, மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -
- எஸ்.நாகராஜன், உத்திரமேரூர்.

