/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர வளைவில் இரும்பு தடுப்பு சீரமைக்கப்படுமா?
/
சாலையோர வளைவில் இரும்பு தடுப்பு சீரமைக்கப்படுமா?
ADDED : நவ 10, 2025 11:25 PM

ஸ்ரீ பெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரத்தில் இருந்து மதுரமங்கலம் செல்லும் சாலையில், ஏராளமான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.
மதுரமங்கலம், காந்துார், கண்ணந்தாங்கல், கோட்டூர், எடையார்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இந்த சாலையில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், காந்துார் மயானம் அருகே சாலை வளைந்து செல்கிறது. இதனால், இப்பகுதியில் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில், வளைவின் இரண்டு பக்கமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
தற்போது, வளைவில் உள்ள இரும்பு தடுப்புகள் சேதமடைந்து, சாலையோரம் விழுந்துள்ளன. இதனால், வளைவில் வேகமாக திரும்பும் வாகனங்கள், கட்டுப்பாட்டை இழுந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே, சேதமடைந்துள்ள இரும்பு தடுப்புகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.சூர்யா, காந்துார்.

