/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டுநரின் கண்ணெதிரே திருடு போன கார் மீட்பு
/
ஓட்டுநரின் கண்ணெதிரே திருடு போன கார் மீட்பு
ADDED : அக் 24, 2025 10:18 PM
குன்றத்துார்: சவாரிக்கு அழைத்து, ஓட்டுநரின் கண்ணெதிரே திருடப்பட்ட கார் மீட்கப்பட்டு, திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர குமார், 42; தனியார் கால் டாக்சி ஓட்டுநர்.
இவர், நேற்று முன்தினம் அதிகாலை ஒரகடத்தில் இருந்து குன்றத்துார் அருகே மலையம்பாக்கத்திற்கு, மாருதி 'ஸ்விப்ட் டிசைர்' காரில், மலையம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ், 22, என்பவரை சவாரிக்கு அழைத்து சென்றார்.
மலையம்பாக்கம் பகுதியில் செல்லும்போது, 'தன் தாய்க்கு உடல் நலம் சரியில்லை; அவரையும் காரில் அழைத்துச்செல்ல வேண்டும்' என தினேஷ் கேட்டுள்ளார்.
இதை நம்பிய ஓட்டுநர் மகேந்திர குமார், காரில் இருந்து கீழே இறங்கி உதவி செய்ய வந்தபோது, அவரது கவனத்தை திசை திருப்பி, தினேஷ் காரை திருடி சென்றார்.
குன்றத்துார் போலீசாரின் விசாரணையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லம் பகுதியில் கார் இருப்பது தெரிய வந்தது. நேற்று காரை மீட்ட போலீசார், தலைமறைவாக உள்ள தினேஷை தேடி வருகின்றனர்.

