/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் மாநகராட்சி காங்., துணை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டம் கமிஷன் விவகாரத்தில் கணக்கு போடும் தி.மு.க., கவுன்சிலர்கள்
/
காஞ்சிபுரம் மாநகராட்சி காங்., துணை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டம் கமிஷன் விவகாரத்தில் கணக்கு போடும் தி.மு.க., கவுன்சிலர்கள்
காஞ்சிபுரம் மாநகராட்சி காங்., துணை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டம் கமிஷன் விவகாரத்தில் கணக்கு போடும் தி.மு.க., கவுன்சிலர்கள்
காஞ்சிபுரம் மாநகராட்சி காங்., துணை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டம் கமிஷன் விவகாரத்தில் கணக்கு போடும் தி.மு.க., கவுன்சிலர்கள்
ADDED : அக் 24, 2025 10:03 PM
காஞ்சிபுரம்: கவுன்சிலர்களுக்கான கமிஷன் விவகாரத்தில் காங்., கட்சியை சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க., கவுன்சிலர்கள் திட்டமிடுகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் உள்ள 51 வார்டுகளில், தி.மு.க., - 33, அ.தி.மு.க., - 8; காங்., - 1; பா.ஜ., - 1; சுயேச்சைகள் - 6; பா.ம.க., 2 என வெற்றி பெற்றனர். மேயராக ஒன்பதாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மகாலட்சுமியும், துணை மேயராக 22வது வார்டு காங்., கவுன்சிலர் குமரகுருநாதனும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேயர் மீதான செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து, தி.மு.க., - அ.தி.மு.க.,- பா.ஜ.,-காங்., சுயேட்சைகள் என ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் சேர்ந்த கவுன்சிலர்கள், மேயர் மகாலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்தாண்டு கொண்டு வந்தனர்.
தீர்மானம் மீதான ஓட்டெடுப்பில், எந்த கவுன்சிலரும் பங்கேற்காததால், மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்த பிரச்னை தீர்ந்து, கடந்த ஒரு ஆண்டாக, சுமூகமாக மாநகராட்சி நிர்வாகம் நடக்கும் நிலையில், திடீரென துணை மேயரான குமரகுருநாதன் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு, தி.மு.க., கவுன்சிலர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
நவம்பர் மாதம் இதற்கான முன்னெடுப்புகள் இருக்கும் என்கின்றனர்.
தி.மு.க.,வில் உள்ள 33 கவுன்சிலர்களில், இரண்டு குழுவாக பிரிந்து செயல்படுகின்றனர். மேயர் ஆதரவு நிலைப்பாட்டிலும், எதிர்ப்பு நிலைப்பாட்டிலும் உள்ளனர்.
மேயருக்கு எதிராக செயல்பட்ட துணை மேயர் குமரகுருநாதனை நீக்கி, அந்த பதவியில் வேறு ஒரு கவுன்சிலரை நியமிக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனால், மாநகராட்சி நிர்வாகத்தில் பிரச்னை, வாக்குவாதம், போராட்டம் என மீண்டும் பல களேபரங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணை மேயர் விவகாரம் குறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
டெண்டர் விவகாரங்களை கவனிக்கும் பணிகள் குழுவுக்கு தலைவராக இருந்த சுரேஷ், மற்ற கவுன்சிலர்களுக்கு அவ்வப்போது கவனித்து வந்தார்.
அவரை மாற்றம் செய்து, பணிகள் குழு தலைவராக கார்த்தி நியமிக்கப்பட்ட பிறகு, கவுன்சிலர்களுக்கு எதிர்பார்த்த கமிஷன் கிடைக்கவில்லை.
இதனால், துணை மேயரை மாற்றி, தி.மு.க.,வைச் சேர்ந்த சூர்யாவை நியமித்தால், அவர்கள் கவனிப்பார்கள் என கவுன்சிலர்கள் சிலர் கணக்கு போடுகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருப்பதால், நவம்பரில் மனு கொடுக்க திட்டமிடுகின்றனர்.
கட்சி உத்தரவை மீறி மேயருக்கு எதிராக போட்டியிட்ட சூர்யாவை தி.மு.க., மேலிடம் ஒன்றும் செய்யாத நிலையில், கூட்டணியில் உள்ள காங்., கட்சியை நீக்கி, தி.மு.க.,வைச் சேர்ந்தவரை நியமிக்கலாம் என திட்டமிடுகின்றனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறியது.

