/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பஸ் மோதியதில் கார், வேன் சேதம்
/
அரசு பஸ் மோதியதில் கார், வேன் சேதம்
ADDED : செப் 28, 2024 10:50 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள சாலை நடுவே திரும்புவதற்கு, 'அசோக்லைலேண்ட் டோஸ்ட்' சரக்கு வாகனம் சாலையோரம் நேற்று, காலை 11:45 மணியளவில் காத்திருந்தது. இந்த வாகனம் பின்னால், 'மாருதி ஸ்விப்ட்' கார் ஒன்றும் காத்திருந்தது.
அவ்வழியே, சென்னை நோக்கி சென்ற, தடம் எண்:76பி வழித்தட அரசு பேருந்து, எதிர்பாராதவிதமாக மாருதி ஸ்விப்ட் கார் மீது மோதியது. பேருந்து மோதிய வேகத்தில், முன்னால் நின்றிருந்த சரக்கு வேன் மீது 'ஸ்விப்ட் கார்' மோதியது. ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதிக்கொண்டதால், சரக்கு வேன் சாலையிலேயே கவிழ்ந்தது.
ஸ்விப்ட் காரின் முன், பின் என இருபக்கமும் சேதமானது. அரசு பேருந்தின் முன்பக்க வலதுபுறம் சேதமானது. இந்த விபத்தில், பேருந்து மற்றும் காரில் இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. சரக்கு வாகனத்தின் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். காயமடைந்த வேன் ஓட்டுனர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து, தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.