/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களியாம்பூண்டி அரசு பள்ளியில் 8 இடத்தில் 'சிசிடிவி' கேமரா
/
களியாம்பூண்டி அரசு பள்ளியில் 8 இடத்தில் 'சிசிடிவி' கேமரா
களியாம்பூண்டி அரசு பள்ளியில் 8 இடத்தில் 'சிசிடிவி' கேமரா
களியாம்பூண்டி அரசு பள்ளியில் 8 இடத்தில் 'சிசிடிவி' கேமரா
ADDED : நவ 21, 2025 01:30 AM

உத்திரமேரூர்: களியாம்பூண்டியில், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், எட்டு இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நேற்று நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 800 மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லாமல் இருந்தது. இதனால், விடுமுறை நாட்களில் வெளியாட்கள் உள்ளே நுழைந்து, அனுமதியின்றி விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தியும், இரவு நேரங்களில் வகுப்பறைகளில் மது பாட்டில்களை வீசியும், கழிப்பறைகளை சேதப்படுத்தியும் வந்தனர்.
தொடர்ந்து, ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை பாதுகாப்பதிலும், ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.
இதைத்தடுக்க, பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த, ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, அரசு பள்ளிக்கு எட்டு கண்காணிப்பு கேமராக்களை, களியாம்பூண்டி நோபல்டெக் தொழிற்சாலை முன்வந்து வழங்கியது. கண்காணிப்பு கேமராக்களை பள்ளி வளாகத்தில் பொருத்தும் பணி நேற்று நடந்தது.

