/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடு - கீழம்பி நான்குவழி சாலை வரும் ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும்
/
செவிலிமேடு - கீழம்பி நான்குவழி சாலை வரும் ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும்
செவிலிமேடு - கீழம்பி நான்குவழி சாலை வரும் ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும்
செவிலிமேடு - கீழம்பி நான்குவழி சாலை வரும் ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும்
ADDED : நவ 21, 2025 01:31 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு - கீழம்பி இடையே உள்ள இருவழி புறவழிச்சாலையை, புதிதாக நான்குவழி தார் சாலையாக மாற்றும் பணி விரைந்து முடிக்கப்பட்டு, வரும் ஜனவரி மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து, சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கீழம்பி புறவழிச்சாலை, 8 கி.மீ., நீளம் உடையது.
இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்ததால், இருவழி சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இருவழிச் சாலையை, நான்குவழிச் சாலையாக மாற்ற தமிழக அரசு, 42 கோடி ரூபாயை ஒதுக்கியது.
இதையடுத்து, காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.எல்.ஏ., எழிலரசன், தி.மு.க., - எம்.பி செல்வம் ஆகியோர் நான்குவழி சாலை பணியை, கடந்த பிப்ரவரியில் துவக்கி வைத்தனர். பணி விரைந்து முடிக்கப்பட்டு, வரும், 2026 ஜனவரி மாதம் நான்குவழி சாலை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் உபகோட்டம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலை 8 கி.மீ., நீளமுடையது. தற்போது, 10 மீட்டர் அகலமுள்ள இரு வழி சாலையை, 16.2 மீட்டர் அகலத்திற்கு, நான்குவழிச் சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.
சாலையின் இரு ஓரங்களிலும் நடப்பட்ட, 1,500க்கும் மேற்பட்ட புளி, இலுப்பை வகை மரக்கன்றுகள் செழித்து வளர்ந்து வருகின்றன. தற்போது தார்சாலை அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இதையடுத்து, சாலை பாதுகாப்பு சம்பந்தமான எச்சரிக்கை குறியீடு, வழிகாட்டி பெயர் பலகைகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்கப்பட்டு, வரும் ஜனவரியில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

