/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் சிமென்ட் கிடங்கு கட்டுமான பணி
/
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் சிமென்ட் கிடங்கு கட்டுமான பணி
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் சிமென்ட் கிடங்கு கட்டுமான பணி
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் சிமென்ட் கிடங்கு கட்டுமான பணி
ADDED : நவ 20, 2025 04:13 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், சிமென்ட் கிடங்கு அறைக்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் கட்டும் தொகுப்பு வீடுகளுக்கு தேவையான கம்பிகள், சிமென்ட் ஆகியவை உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு வைக்கப் பட்டுள்ள இரும்பு கம்பிகள், சிமென்ட் மூட்டைகள் போதிய கிடங்கு இல்லாததால், திறந்தவெளியில் வைக்கப்பட்டு வந்தது.
இதனால், மழை நேரங்களில் சிமென்ட் மற்றும் இரும்புக் கம்பிகள் நனைந்து, அதன் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி வந்தது.
சிமென்ட் மற்றும் இரும்பு கம்பிகளை வைக்கும் வகையில், கிடங்கு வசதி ஏற்படுத்தி பாதுகாக்க, ஊரக வளர்ச்சி துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி, 2025 --- 26ம் நிதி ஆண்டில், ஒன்றிய பொது நிதியில் இருந்து, 20.20 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கிடங்கு அறை ஒன்று கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கட்டுமான பணிகள் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, கிடங்கு பயன்பாட்டுக்கு வரும் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

