/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாமல் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா
/
தாமல் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா
ADDED : ஜன 27, 2025 11:44 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பள்ளிக் கல்வித்துறை சார்பில், தாமல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நுாற்றாண்டு தொடக்க விழாவை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.
இப்பள்ளியில், 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சட்டசபை உறுப்பினர் நிதியின் கீழ் அமைக்கப்பட்ட 'ஸ்மார்ட்' வகுப்பையும், நுாற்றாண்டு ஜோதியையும், கலெக்டர் கலைச்செல்வி மற்றும் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முன்னாள் பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி, மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் திறன் வெளிப்பாடு நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.
இதில், கலெக்டர் கலைச்செல்வி பேசியதாவது:
பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அரசு பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள் மற்றும் பெற்றோரை ஒன்றிணைக்கவும், பெருமைபடுத்தும் நிகழ்வாக, 100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகளில், நுாற்றாண்டு விழா கொண்டாட திட்டமிடப்பட்டது.
மாநில அளவில், ஜனவரி 22ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடக்க விழா துவக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட அளவில் தொடக்க விழா, பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தாமல் கிராமத்தில், 1913ல் தொடக்கப்பள்ளியாக துவக்கப்பட்டு, 2008ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது நுாற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 100 ஆண்டுகள் கடந்த 82 அரசு பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஒன்றிணைக்கும் முயற்சி யாக, பள்ளி ஆண்டு விழாவோடு, நுாற்றாண்டு விழாவை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.