தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாணவ - மாணவியர் 30 பேருக்கு சான்றிதழ் வழங்கல்

 மாணவ - மாணவியர் 30 பேருக்கு சான்றிதழ் வழங்கல்

 மாணவ - மாணவியர் 30 பேருக்கு சான்றிதழ் வழங்கல்


ADDED : ஜூலை 07, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 10:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: திருக்குறள் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 30 மாணவ - மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று நடந்தது.

தமிழக அரசு சார்பில், திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் மூலம், மாவட்டந்தோறும் திருக்குறள் திருப்பணிகள்' திட்டத்தின் கீழ், மாணவ - மாணவியருக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய மூன்று மையங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

திருக்குறள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா, ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

இதில், பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீபிரியா, 30 மாணவ - மாணவியருக்கு பங்கேற்பு சான்றிதழும், பரிசும் வழங்கி பாராட்டினார்.

இதில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சாந்தி, இத்திட்டத்தின் கண் காணிப்பு அலுவலர்கள், திருக்குறள் பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us