/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி தர்காவில் சந்தனகுட உற்சவம்
/
காஞ்சி தர்காவில் சந்தனகுட உற்சவம்
ADDED : அக் 21, 2024 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், ஹஜரத் சையத் ஷா ஹமீது அவுலியா பாதுஷா சிஷ்தி தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனகுட உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான திருச்சந்தனக்குட உருஸ் உற்சவம் கடந்த 17ம் தேதி இரவு, மக்ரிப் தொழுகைக்குப்பின், கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருச்சந்தன குடம் உருஸ் உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அரபி மவுலுது மற்றும் உருது கஸிதா நடைபெற்றது.
இதில், முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினார். நேற்று திருசந்தனக்குட உருஸ் உற்சவம் நடந்தது.