/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதர் கோவில் பிரம்மோத்சவம் ஊர்வலத்திற்கு தேர் தயார்
/
வரதர் கோவில் பிரம்மோத்சவம் ஊர்வலத்திற்கு தேர் தயார்
வரதர் கோவில் பிரம்மோத்சவம் ஊர்வலத்திற்கு தேர் தயார்
வரதர் கோவில் பிரம்மோத்சவம் ஊர்வலத்திற்கு தேர் தயார்
ADDED : மே 11, 2025 12:36 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோத்சவம்,இன்று, காலை 4:20 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
உத்சவத்தையொட்டி, தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்க ளில் எழுந்தருளும் வரத ராஜ பெருமாள் முக்கியவீதி வழியாக உலாவருவார்.
இதில், ஏழாம் நாள் பிரபல உத்சவமான தேரோட்டம், வரும் 17ம் தேதி, காலை 6:00 மணிக்கு நடைபெறுகிறது.
இதையொட்டி, கடந்த மார்ச் மாதம் தேர் பழுது பார்க்கும் பணி நடந்தது. இந்நிலையில், தேரின் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த தகடுகள் பிரித்து எடுக்கப்பட்டது.
தேரின் கீழே இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. தேரின் மீது படிந்திருந்த துாசு, துகள், சருகுகள் நேற்று காலை, காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் வாயிலாக சுத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளது.
இதில், தீயணைப்பு வீரர்கள், தேரில் முழு உயரத்திற்கும் தண்ணீரைவேகமாக பீய்ச்சிஅடித்து தேரை சுத்தம் செய்தனர். இதைத் தொடர்ந்து, தேரில் பல்வேறு அலங்காரம் மற்றும் அழகுப்படுத்தும் பணிகள் துவங்கப்பட உள்ளதாக கோவில்நிர்வாகத்தினர்தெரிவித்தனர்.