/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செம்பரம்பாக்கம் ஏரி கரை சாலை மூடல் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்
/
செம்பரம்பாக்கம் ஏரி கரை சாலை மூடல் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்
செம்பரம்பாக்கம் ஏரி கரை சாலை மூடல் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்
செம்பரம்பாக்கம் ஏரி கரை சாலை மூடல் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்
ADDED : டிச 13, 2024 01:54 AM

குன்றத்துார்,:சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் கரை 8 கி.மீ., துாரம் உள்ளது.
ஏரி கரைக்கு செல்லும் பிரதான வழி குன்றத்துார் அருகே உள்ளது. இந்த வழியே வாகனங்களில் பலர் ஏரிக்கரைக்கு சென்று பார்வையிட்டு பொழுதுப்போக்கி வந்தனர். குன்றத்துார் போலீசார் ஏரி கரையியின் மீது ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரி கரைக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள இரும்பு கேட்டை பூட்டு போட்டு பூட்டி விட்டனர்.
இதனால், வாகனங்களில் பொதுமக்கள் ஏரி கரைக்கு செல்லமுடிய வில்லை. ஆனால், கேட் அருகே உள்ள காலி நிலங்கள், ஏரி கரையின் வேறு பகுதிகளில் உள்ள காலி நிலங்கள் வழியே இளைஞர்கள், காதல் ஜோடியினர் ஏரி கரைக்கு செல்கின்றனர்.
கேட் மூடி உள்ளதால் ஏரிக்கரையில் போலீசார் ரோந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், ஏரி கரையில் சமூக விரோத செயல்கள் அதிகம் நடக்கிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
க்ஷமது, கஞ்சா போதை நபர்கள் ஏரி கரையில் முகாமிடுகின்றனர். இதனால், அங்கு செல்லும் காதல் ஜோடிக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
இந்த ஏரி கரையில் 8 மாதத்திற்கு முன் இளைஞர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டு ஏரியில் வீசப்பட்டார். கடந்த வாரம் ஏரி கரை அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
ஏரி கரை சாலை திறந்திருந்தபோது குற்ற சம்பவங்கள் இல்லை.
நீர்வளத்துறையினர் இந்த ஏரிக்கு மக்கள் யாரும் செல்லாத வகையில் வேலி அமைக்க வேண்டும் அல்லது ஏரிக்கரைக்கு செல்லும் சாலையை திறந்து விட்டு போலீசார் ஏரி கரையில் ரோந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.