/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை
/
சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை
சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை
சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை
ADDED : ஏப் 24, 2025 01:36 AM

குன்றத்துார்:சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் 3,600 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ளது.
குன்றத்துார் அருகே இந்த ஏரிக்கரை, 8 கி.மீ.. நீளத்திற்கு உள்ளது. இந்த ஏரிக்கரை முறையான பராமரிப்பின்றி உள்ளது. ஏரிக்கரையில் பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன.
ஏரிக்கரைக்கு செல்லும் நான்கு வழிகளில் மூன்று வழிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஏரிக்கரையில் போலீசார் ரோந்து செல்ல முடிவதில்லை. போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால், செம்பரம்பாக்கம் ஏரிக்கரை சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: செம்பரம்பாக்கம் ஏரிக்கரைக்கு செல்லும் மூன்று வழிகள் மூடப்பட்டுள்ள நிலையில், குன்றத்துார் அருகே, சிறுகளத்துார் ஊராட்சி எல்லையில் உள்ள பழைய கலங்கல் அருகே உள்ள வழி மூடப்படாமல் உள்ளது.
இந்த வழியை உள்ளூர் மக்கள் மட்டும் அறிந்து வைததிருந்தனர். தற்போது இந்த வழி பலருக்கும் தெரிந்து, இந்த வழியே ஏரிக்கரைக்கு எளிதாக செல்கின்றனர்.
பகல் நேரத்தில் காதல் ஜோடிகள் ஏரிக்கரையில் தஞ்சம் அடைகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் இந்த வழியே ஏரிக்கரைக்கு சென்று மது அருந்துகின்றனர்.
இரவு நேரத்தில் ரவுடிகள் ஏரிக்கரையில் தஞ்சம் அடைந்து மது விருந்து உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
கடந்த ஆண்டு ஏரியின் பழைய கலங்கல் அருகே இளைஞர் ஒருவரது உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவமும் நடந்துள்ளது.
எனவே, செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதை சீரமைக்க வேண்டும். பொதுமக்கள் ஏரியை கண்டு ரசிக்கும் வகையில், ஏரிக்கரைக்கு செல்லும் அனைத்து வழிகளையும் திறந்து விட்டு போலீசார் பகல் இரவு நேரத்தில் ரோந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.