/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சென்னை பல்கலை மண்டல ஹாக்கி கோல் மழை பொழிந்த எம்.ஓ.பி., அணி
/
சென்னை பல்கலை மண்டல ஹாக்கி கோல் மழை பொழிந்த எம்.ஓ.பி., அணி
சென்னை பல்கலை மண்டல ஹாக்கி கோல் மழை பொழிந்த எம்.ஓ.பி., அணி
சென்னை பல்கலை மண்டல ஹாக்கி கோல் மழை பொழிந்த எம்.ஓ.பி., அணி
ADDED : டிச 17, 2024 12:57 AM

சென்னை,சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், 'ஏ' மற்றும் 'பி' மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகள் நடக்கின்றன.
அந்த வகையில், மண்டலங்களுக்கு இடையிலான பெண்கள் ஹாக்கி போட்டி,எழும்பூர், ராதாகிருஷ்ணன்ஹாக்கி அரங்கில் நேற்று காலை துவங்கியது.
போட்டியில், இரு மண்டலங்களில் வெற்றி பெற்ற எம்.ஓ.பி.வைஷ்ணவா, எத்திராஜ் மற்றும் இரு மண்டல இணைப்பு அணிகள் பங்கேற்றன.
மண்டல இணைப்பு அணிகளில், பல்வேறு கல்லுாரிகளில் இருந்து, மாணவியர் இடம்பெற்றிருப்பர். போட்டிகள்அனைத்தும் 'லீக்'முறையில் நடக்கின்றன.
முதல் போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவா மற்றும் 'பி' மண்டல இணைப்பு அணிகள் எதிர்கொண்டன. அதில், 11 - 0 என்ற கோல்கணக்கில் எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில்,எத்திராஜ் அணி,6 - 0 என்ற கணக்கில் 'ஏ'மண்டல இணைப்பு அணியை தோற்கடித்தது.
மூன்றாவது போட்டி யில், எம்.ஓ.பி.வைஷ்ணவா மற்றும்எத்திராஜ் என, பலமான இரு அணிகள் பலப் பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பான ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி அதிரடியாக விளையாடி, புள்ளிகளை குவித்தது. எதிர் அணியை இறுதி வரை ஒரு புள்ளிகள்கூட எடுக்கவிடாமல்துரத்தியது.
முடிவில், 10 - 0 என்ற கணக்கில் எம்.ஓ.பி., அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கிறது.

