/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுாரில் 21ல் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
/
உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுாரில் 21ல் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுாரில் 21ல் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுாரில் 21ல் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
ADDED : ஜன 16, 2025 07:15 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்தின்படி, வரும் 21 முதல் 24 வரையிலான நான்கு நாட்கள், மூன்றாம் கட்டமாக முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட உள்ளன.
உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில் 10 முகாம்களும், ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியில் 10 முகாம்களும் என, மொத்தம் 20 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இம்முகாம்களை பயன்படுத்தி, உரிய ஆவணங்களுடன் மனு செய்து பயன் அடையுமாறு, கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில், ஆசூர், ஆற்பாக்கம், மாகரல், அரும்புலியூர் உள்ளிட்ட 10 இடங்களிலும், ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியில், படப்பை, பூந்தண்டலம், நடுவீரப்பட்டு, திருமுடிவாக்கம் உள்ளிட்ட 10 இடங்களிலும், 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.