/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் தாலுகாவில் மக்களுடன் முதல்வர் முகாம்
/
உத்திரமேரூர் தாலுகாவில் மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஜன 22, 2025 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா பெருநகர் மற்றும் கரும்பாக்கம் ஆகிய கிராமங்களில், மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடந்தது. அப்போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர், முகாமை நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த இரு இடங்களில் நடந்த முகாமில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி., செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.