ADDED : ஜன 19, 2025 07:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, பெருநகர் கிராமத்தில் உள்ள பி.எஸ்.எம்.கே., திருமண மண்டபத்தில், நாளை காலை 9:00 மணிக்கு, மக்களுடன் முதல்வர் முகாம் நடக்க உள்ளது.
இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் நல உதவி பெறுதல், தொழில் கடன் பெறுதல் உட்பட 15 துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.
அதேபோல், அரும்புலியூர் கிராமத்தில் உள்ள கரும்பாக்கம் சமுதாய கூடத்திலும், நாளை காலை 9:00 மணிக்கு மக்களுடன் முதல்வர் முகாம் நடக்க உள்ளது.