/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'முதல்வர் மினி ஸ்டேடியம்' சாலவாக்கத்திற்கு மாற்றம்
/
'முதல்வர் மினி ஸ்டேடியம்' சாலவாக்கத்திற்கு மாற்றம்
'முதல்வர் மினி ஸ்டேடியம்' சாலவாக்கத்திற்கு மாற்றம்
'முதல்வர் மினி ஸ்டேடியம்' சாலவாக்கத்திற்கு மாற்றம்
ADDED : அக் 31, 2025 11:40 PM

உத்திரமேரூர்: சாலவாக்கத்தில், உத்திரமேரூர் தொகுதிக்கான, 'முதல்வர் மினி ஸ்டேடியம்' கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
தமிழக சட்டசபையில் 2023 - 24ல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மானிய கோரிக்கையில், அனைத்து தொகுதிகளிலும் உள்ள இளைஞர்களின், விளையாட்டு திறனை ஊக்குவிக்க, 'முதல்வர் மினி ஸ்டேடியம்' அமைக்கப் படும் என அறிவிக்கப் பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதிக்கான 'முதல்வர் மினி ஸ்டேடியம்' 3 கோடி ரூபாய் மதிப்பில், திருப்புலிவனத்தில் கட்ட, ஓராண்டிற்கு முன், பூமி பூஜை போடப் பட்டது.
ஆனால், விளையாட்டு மைதானம் கட்டப்படும் இடம் சம்பந்தமாக, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், முதல்வர் மினி ஸ்டேடியம் வேறொரு இடத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சாலவாக்கத்தில் முதல்வர் மினி ஸ்டேடியம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணி தொடங்குவதற்கான பூமி பூஜை நடந்தது.
சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, முதல்வர் மினி ஸ்டேடியம் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். இதில், உத்திரமேரூர் ஒன்றிய துணை சேர்மன் வசந்தி, எடமச்சி ஊராட்சி தலைவர் தர்மராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

