/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி சித்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
/
காஞ்சி சித்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
காஞ்சி சித்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
காஞ்சி சித்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : அக் 31, 2025 11:41 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பல்லவன் நகர் சித்தி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் பல்லவன் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காமராஜர் தெருவில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் சமீபத்தில் பல்வேறு திருப்பணிகளுடன் புனரமைக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 29ம் தேதி, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று, காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடும், 9:30 மணிக்கு வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
அதை தொடர்ந்து, உற்சவர், நவக்கிரஹங்கள் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சித்தி விநாயகர் வீதியுலா வந்தார்.