/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 25, 2025 04:01 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், தேசிய குழந்தைகள் தினம், உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் மற்றும் சர்வதேச குழந்தைகள் தினங்களை முன்னிட்டு, நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில், கல்லுாரி மாணவ - மாணவியர் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இப்பேரணியில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில், துவங்கிய பேரணி, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.
இப்பேரணியில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

