/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவம் அய்யங்கார்குளத்தில் விமரிசை
/
சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவம் அய்யங்கார்குளத்தில் விமரிசை
சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவம் அய்யங்கார்குளத்தில் விமரிசை
சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவம் அய்யங்கார்குளத்தில் விமரிசை
ADDED : ஏப் 14, 2025 12:55 AM

காஞ்சிபுரம்:ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் நடவாவி உத்சவம், அய்யங்கார்குளம் கிராமத்தில் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பாண்டிற்கான சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவம் நேற்று நடந்தது.
உத்சவத்தையொட்டி உபயநாச்சியாருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு மேனா பெட்டியில் எழுந்தருளி, அய்யங்கார்குளம் கிராமத்திற்கு புறப்பட்டார்.
அதிகாலை செவிலிமேடில் கிராம வீதிகளில் உலா வந்தார். தொடர்ந்து, புஞ்சையரசந்தாங்கல், வாகை, துாசி கிராமத்தில் வீதியுலா வந்தார். துாசி வைகுண்ட பெருமாள் கோவிலில் சுவாமிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நிகழ்ந்தது.
அப்துல்லாபுரம், அய்யங்கார்குளத்தில் வீதியுலா சென்று, இரவு அய்யங்கார்குளம் கிராமத்தில் சஞ்சீவிராயர் கோவிலில் எழுந்தருளினார், அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.
அங்கிருந்து புறப்பாடாகி தாதசமுத்திரம் ஏரிக்கரை வழியாக சென்று நடவாவி கிணற்றில் வரதராஜ பெருமாள் இறங்கினார். அங்கு பக்தி உலாத்தல், பூஜைகள் நடைபெற்றபின், கிணற்றில் இருந்து வெளியே எழுந்தருளிய பெருமாள், புஞ்சையரசந்தாங்கல் வழியாக செவிலிமேடு பாலாற்று பந்தலில் எழுந்தருளினார்.
அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், நிவேதனம், பூஜைகளுக்குப்பின், பாலாற்றங்கரையில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

