/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுங்குவார்சத்திரத்தில் சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
/
சுங்குவார்சத்திரத்தில் சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 08, 2025 09:26 PM
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில், இயங்கிவரும் சாம்சங் தொழிற்சாலையில், தொழிற்சங்கம் அமைக்க வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டங்களை சி.ஐ.டி.யு., நடத்தி வந்தது.
இதையடுத்து, தொழிற்சாலைக்குள் கூட்டத்தை கூட்டி, பதற்றமான சூழலை உருவாக்கியதாக கூறி, தொழிற்சங்க நிர்வாகிகள் மூன்று பேரை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் கடிதம் அளித்தது.
இதற்கு எதிர்ப்பு தொரிவித்து, 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 4 வது நாளாக தொழிற்சாலையின் உள்ளே, அலுவலக வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிளாலர்களுக்கு ஆதரவாக, சி.ஐ.டி.யு., சார்பில், சுங்குவார்சத்தித்தில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட குழு சார்பில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில், மாவட்ட செயலர் முத்துகுமார் தலைமை வகித்தார். மூன்று தொழிலாளர்களின் சஸ்பெண்ட் ஆணையை திரும்ப பெற வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.

