/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மஞ்சள் நீராட்டு விழாவில் மோதல் ஒருவர் கொலை: 6 பேர் கைது
/
மஞ்சள் நீராட்டு விழாவில் மோதல் ஒருவர் கொலை: 6 பேர் கைது
மஞ்சள் நீராட்டு விழாவில் மோதல் ஒருவர் கொலை: 6 பேர் கைது
மஞ்சள் நீராட்டு விழாவில் மோதல் ஒருவர் கொலை: 6 பேர் கைது
ADDED : அக் 15, 2024 07:49 PM
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் தாலுகா, புத்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம்,46. இவர், தன் தங்கை அழகம்மாள் என்பவருடைய மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு, கீழ்பேரமநல்லுார் கிராமத்திற்கு, கடந்த 13ம் தேதி, குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
சிவானந்தத்தின் அக்கா பவானி என்பவரும் குடும்பத்தினருடன் வந்துள்ளார். அப்போது, சிவானந்தம் மற்றும் பவானி குடும்பத்தினரிடையே பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், பவானி தரப்பு உறவினர்கள் சிவானந்தத்தை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக, சிவானந்தத்தின் மகன் திலீப், மாகரல் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். அதையடுத்து, மாகரல் போலீசார் வழக்கு பதிந்து, பவானி, 48; அரவிந்த், 24; மதன், 20; பாண்டியன், 38; வேண்டா, 36; ரோஜா, 36 ஆகிய ஆறு பேரை கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிவானந்தம், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, மாகரல் போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.