/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மங்களதீர்த்த குளத்தில் துாய்மைப் பணி
/
மங்களதீர்த்த குளத்தில் துாய்மைப் பணி
ADDED : நவ 17, 2025 08:09 AM

காஞ்சிபுரம்: தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பு சார்பில், காஞ்சிபுரம் மங்களதீர்த்த குளத்தை துாய்மை செய்யும் பணி நேற்று நடந்தது.
தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் அமைப்பு சார்பில், தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில் மாதந்தோறும் துாய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, 415வது மாத துாய்மை பணியாக, காஞ்சிபுரம் மங்கள தீர்த்த ஈஸ்வரர் கோவில் குளத்தை நேற்று துாய்மைப்படுத்தினர்.
இதில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார், புதுச்சேரி பகுதி மண்டல, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் , காஞ்சிபுரம் மங்களதீர்த்த குளத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை முழுதுமாக அகற்றினர். அதை தொடர்ந்து, மங்களேஸ்வரர் கோவில், ஏகாம்பரநாதர் கோவில் பிரகாரங்களில் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். பூஜை பொருட்களை சுத்தம் செய்தனர்.

