/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் முப்பெரும் விழா
/
காஞ்சிபுரத்தில் முப்பெரும் விழா
ADDED : நவ 17, 2025 08:09 AM

காஞ்சிபுரம்: எழுத்தாணி தமிழ் கலை இலக்கிய சங்கம், தமிழ்நாடு சிற்றிதழ்கள் மற்றும் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு சார்பில், கவியரங்கம், பட்டிமன்றம், விருது வழங்குதல் என, முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் நடந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் தலைமை வகித்தார். குன்றை குப்புசாமி வரவேற்றார். எழுத்தாளர் கூரம் துரை முன்னிலை வகித்தார்.
இதில், கவிஞர் முரளி எழுதிய, சிந்தனை வித்துக்கள், முத்துக்கள் மூன்று' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.
கவிஞர் திருமால்ராசு, கலைச்செல்வி வெங்கடேசன் ஆகியோருக்கு அறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டை எழுத்தாணி அரிராசு செய்திருந்தார்.

