ADDED : செப் 23, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:
வாலாஜாபாத்தில், அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 50 ஆண்டுகளாக இயங்குகிறது. இந்தப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில், கைவிடப்பட்ட கட்டடங்கள் உள்ள ஒரு பகுதியை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதராக இருந்தது. இதனால், அப்பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்கக்கூடும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சப்பட்டனர்.
இதையடுத்து, அப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கோரிக்கையின்படி, வாலாஜாபாத் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் பள்ளியில் சேவை பணி மேற்கொண்டனர்.
பள்ளி வளாகத்திற்குள் புதர் மண்டிய இடங்களில் செடி, கொடிகளை அகற்றி சுத்தப்படுத்தினர்.