ADDED : அக் 06, 2025 01:05 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் சிவன் கோவில்களில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
சென்னை, எழும்பூர் பகுதியில் சிவபெருமான் உழவாரப் பணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தின் வாயிலாக மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஹிந்து கோவில்களில் துாய்மை பணி செய்வது வழக்கம்.
அதன்படி, உத்திரமேரூர் அடுத்த, காட்டாங்குளம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், இந்த மாதத்திற்கான துாய்மை பணி மன்ற தலைவர் சிவசேகர் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், கோவில் வளாகத்தில் உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, மூலவர் சிலை, உபசன்னிதி, கோவில் கோபுரம் ஆகியவை துாய்மைப்படுத்தப்பட்டன. இதில் சிவனடியார் சிவபாலன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
அதேபோல, உத்திரமேரூர் அடுத்த, தண்டரை கிராமத்தில் உள்ள குந்தீஸ்வரர் கோவிலிலும், சென்னை தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் ஐந்தெழுத்து ஓதும் சிவனருள் தொண்டர்கள் உழவாரப் பணி மன்றத்தின் வாயிலாக துாய்மை பணி நடந்தது.
இதில் மன்ற தலைவர் பாலமுருகன், சிவனடியார்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.