/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் பேரூராட்சி தெருக்களில் துாய்மை பணி
/
உத்திரமேரூர் பேரூராட்சி தெருக்களில் துாய்மை பணி
ADDED : நவ 06, 2025 01:59 AM

உத்திரமேரூர்: -உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் துாய்மை பணி நேற்று நடந்தது.
உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகளில் உள்ள 404 தெருக்களில் பருவ மழை காலத்தை முன்னிட்டு, துாய்மை பணி நேற்று நடந்தது.
அதில், தெருக்களில் தேங்கியுள்ள குப்பையை சேகரித்து, மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து, குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தெருக்களில் உள்ள வடிகால்வாய்கள் துார்வாரப்பட்டு, கழிவுநீர் தடையின்றி செல்லும் வகையில், அடைப்புகள் சரி செய்யப்பட்டன.
தொடர்ந்து, பேரூராட்சியின் முக்கிய இடங்களை துாய்மைப்படுத்தி, தொற்று நோய் பரவாமல் இருக்க பிளீச்சிங் பவுடர் போடப்பட் டது. தெருக்களின் ஓரங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளும் அகற்றப்பட்டன.
மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் துாய்மை செய்யப்பட்டு, சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

