/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்வரத்து கால்வாயின் தடுப்புச்சுவர் சேதம் விளைநிலத்தை மழைநீர் சூழும் அபாயம்

ADDED : நவ 06, 2025 01:58 AM

களக்காட்டூர்: களக்காட்டூர் தாங்கல் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயின் கரை சேதமடைந்துள்ளது. இதனால், விளை நிலத்தை மழைநீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில், தாங்கல் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது.
கடந்த மாதம் பெய்த மழையின் போது மண் அரிப்பால் கால்வாயின் பக்கவாட்டு தடுப்புச்சுவரின் ஒரு பகுதி சேதமடைந்து உள்ளது. இதனால், மழைநீர் ஏரிக்கு செல்லாமல் அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் குடி யிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், சேதமடைந்த நிலையில் உள்ள களக்காட்டூர் தாங்கல் ஏரிக்கரையின் தடுப்புச் சுவரை சீரமைக்க, காஞ்சி புரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.