/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு தேரடி அருகில் சுகாதார சீர்கேடு
/
பாதாள சாக்கடையில் அடைப்பு தேரடி அருகில் சுகாதார சீர்கேடு
பாதாள சாக்கடையில் அடைப்பு தேரடி அருகில் சுகாதார சீர்கேடு
பாதாள சாக்கடையில் அடைப்பு தேரடி அருகில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூலை 14, 2025 11:51 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் தேரடி அருகில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால், சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி அருகில் உள்ள மசூதி தெருவில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இத்தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக வெளியேறிய கழிவுநீர், தேரடி ஆஞ்சநேயர் கோவில் வழியாக காந்தி சாலை வரை வழிந்தோடியது.
இதனால், காந்தி சாலையில் நடந்து சென்றவர்கள், ஆஞ்சநேயர் கோவில், மசூதிக்கு சென்றவர்கள், மசூதி தெருவில் குடியிருப்பு வாசிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தால், பெயர் அளவிற்கு அடைப்பை நீக்குகின்றனர். ஓரிரு நாளில் மீண்டும் அடைப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இதனால், தர்கா சந்து பகுதியில் வசிப்போருக்கு தொற்றுநோய் ஏற்படும் சூழல் உள்ளது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.