/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதல்வர் கோப்பை ஹேண்ட்பால் பச்சையப்பன் கல்லுாரி 'சாம்பியன்'
/
முதல்வர் கோப்பை ஹேண்ட்பால் பச்சையப்பன் கல்லுாரி 'சாம்பியன்'
முதல்வர் கோப்பை ஹேண்ட்பால் பச்சையப்பன் கல்லுாரி 'சாம்பியன்'
முதல்வர் கோப்பை ஹேண்ட்பால் பச்சையப்பன் கல்லுாரி 'சாம்பியன்'
ADDED : செப் 23, 2024 02:33 AM

காஞ்சிபுரம்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இதில், கல்லுாரி மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டி நடந்தது.
இறுதிப்போட்டியில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அணியினர், சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி அணியை 17 - -6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றது.
இதன் வாயிலாக, அடுத்த மாதம் திருச்சியில் நடைபெற உள்ள கல்லுாரி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹேண்ட் போட்டியில் பங்கேற்க, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சாந்தி, கல்லுாரி முதல்வர் பி.முருககூத்தன், கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் செந்தில் தங்கராஜ் , பயிற்சியாளர் ஜோசப், சசிகுமார், பாலமுருகன் உள்ளிட்டோர் பாராட்டினர்.