/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சி செயல்பாடு புள்ளி விபரம் சேகரிப்பு
/
ஊராட்சி செயல்பாடு புள்ளி விபரம் சேகரிப்பு
ADDED : ஆக 28, 2025 01:38 AM
காஞ்சிபுரம்,:ஊராட்சிகளின் செயல்பாடு புள்ளி விபரங்களை சேகரிக்கும் பணியில் ஊரக வளர்ச்சி துறையினர் களமிறங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 247 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சிகளில், வேளாண்மை, கால்நடை, சுகாதாரம், நுகர்வோர் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு, பெண்கள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், சமூக நலன், வருவாய், காவல் துறை ஆகிய துறைகளுடன் ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளின் புள்ளி விபரங்களை ஊராட்சி மகளிர் குழுவினர் சேகரிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
இந்த புள்ளி விபரங்களை, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று தர வரிசை வெளியிடப்பட உள்ளது என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.