/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் மார்க்கெட் கட்டட பணி விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
/
காஞ்சியில் மார்க்கெட் கட்டட பணி விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
காஞ்சியில் மார்க்கெட் கட்டட பணி விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
காஞ்சியில் மார்க்கெட் கட்டட பணி விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
ADDED : மார் 05, 2024 11:59 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், செங்கழுநீரோடை வீதியில், 4.6 கோடி ரூபாய் மதிப்பில், கலைஞர் நகர்ப்புற திட்டத்தின் கீழ் கட்டப்படும் நேரு மார்க்கெட் கட்டுமான பணிகளை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தேரடி தெருவில், 25 லட்ச ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அவர் ஆய்வு செய்து, அங்குள்ள வசதிகளை கேட்டறிந்தார்.
அப்போது, மார்க்கெட் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இதையடுத்து, மளிகை தெருவில் உள்ள ரேஷன் கடையில், உணவு பொருட்கள் இருப்பு, பதிவேடுகளையும் கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது, மாநகராட்சி கமிஷனர்செந்தில்முருகன், பொறியாளர் கணேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.