/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இயற்கை உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
/
இயற்கை உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
இயற்கை உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
இயற்கை உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
ADDED : அக் 23, 2025 09:10 PM
காஞ்சிபுரம்: தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், இயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கத்திரி, மிளகாய், வெண்டை, கொய்யா, மல்லி மற்றும் கனகாம்பரம் போன்ற தோட்டக்கலைப் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயி களின் விளைச்சலை பெருக்குவதற்காக அதிகமான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அதனால் ரசாயன உரங்களின் நச்சுத்தன்மை நாம் தினமும் உட்கொள்ளும் காய்கறிகள், பழங்களில் அதிக அளவில் காணப் படுகின்றன.
இதனால் உடலுக்கு குறுகிய மற்றும் நீண்டகால பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டிரியா போன்ற உயிர் உரங்கள், மண்புழு உரம், பஞ்சகாவ்யா, மீன் அமிலம் போன்ற இயற்கை இடு பொருட்கள், வேப்ப எண்ணெய், புங்கம் எண்ணெய், பூண்டுசாறு, 3ஜி கரைசல், இயற்கை பூச்சிக் கொல்லிகள், விரட்டிகள், பூச்சிகளை கவர்ந்து அழிக்கக்கூடிய மஞ்சள் மற்றும் நீல நிற ஒட்டுப்பொறிகள், விளக்குப்பொறி மற்றும் இனக்கவர்ச்சி பொறிகளை பயன் படுத்தலாம்.
ஒருங்கிணைந்த உர மற்றும் பூச்சி மேலாண்மை முறையை தோட்டக்கலை விவசாயிகள் கடைப் பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

