/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடியில் குழந்தைகளின் கற்றல் திறனை கேட்டறிந்த கலெக்டர்
/
அங்கன்வாடியில் குழந்தைகளின் கற்றல் திறனை கேட்டறிந்த கலெக்டர்
அங்கன்வாடியில் குழந்தைகளின் கற்றல் திறனை கேட்டறிந்த கலெக்டர்
அங்கன்வாடியில் குழந்தைகளின் கற்றல் திறனை கேட்டறிந்த கலெக்டர்
ADDED : ஆக 07, 2025 01:47 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளின் கற்றல் திறனை, கலெக்டர் கலைச்செல்வி கேட்டறிந்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வையாவூர் சாலையில் இயங்கிவரும் ரேஷன் கடை மற்றும் கிழக்கு ராஜ வீதியில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று ஆய்வு செய்தார்.
ரேஷன் கடையில் பார்வையிட்டு, பொருள்களின் தரத்தினை ஆய்வு செய்து, இருப்பு நிலைகளை கேட்டறிந்தார். பின் கடையில் பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்கப்படுவதையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, கிழக்கு ராஜ வீதியில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டார்.
அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் கற்றல் திறனை கேட்டறிந்தார். மேலும், மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் ஆய்வு செய்தார்.