/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
35 வழித்தடங்களில் மினி பஸ் சேவை ஆணைகளை வழங்கி உத்தரவிட்ட கலெக்டர்
/
35 வழித்தடங்களில் மினி பஸ் சேவை ஆணைகளை வழங்கி உத்தரவிட்ட கலெக்டர்
35 வழித்தடங்களில் மினி பஸ் சேவை ஆணைகளை வழங்கி உத்தரவிட்ட கலெக்டர்
35 வழித்தடங்களில் மினி பஸ் சேவை ஆணைகளை வழங்கி உத்தரவிட்ட கலெக்டர்
ADDED : மார் 20, 2025 01:14 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் பொதுமக்கள் பயனடையும் வகையில், மினி பஸ் சேவை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, மினி பஸ் சேவைக்கு, பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து கருத்துருக்கள் பெறப்பட்டன.
தமிழக அரசின் அரசாணையின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களான காஞ்சிபுரத்தில் 29 வழித்தடங்களிலும், ஸ்ரீபெரும்புதூரில் 5 வழித்தடங்களிலும், குன்றத்துாரில் 5 வழிதடங்களிலும் என, மொத்தம் 39 வழித்தடங்களுக்கான விபரங்கள், மாவட்ட அரசிதழில், பிப்.,12 ல் வெளியிடப்பட்டது. இந்த வழித்தடங்கள், கிராமங்களில் இருந்து முக்கிய ஊர்களை இணைக்கும் வகையில் தேர்வு செய்யப்படட்டன.
அதன்படி காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 29 வழிதடங்களுக்கு 27 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் ஒரு வழித்தடத்திற்கு 2 விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் குலுக்கல் முறையில் கலெக்டர் கலைச்செல்வி முன்னிலையில் ஒரு வழித்தடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 26 வழித்தடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு ஆணைகளை கலெக்டர் கலைச்செல்வி ஆணைகளை வழங்கினார். 3 வழிதடங்களுக்கு விண்ணப்பிக்கங்கள் பெறப்படவில்லை.
அதேபோல, ஸ்ரீபெரும்புதுார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், 5 வழித்தடங்களுக்கு 9 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் ஒரு வழிதடத்திற்கு 5 விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், குலுக்கல் முறையில் ஒரு வழித்தடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 4 வழிதடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது. ஒரு வழித்தடத்திற்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை
அதேபோல, குன்றத்துார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பெறப்பட்ட 5 வழித்தடங்களுக்கு 9 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 2 வழித்தடத்திற்கு 7 விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வழித்தடங்களின் விண்ணப்பதாரர்களுக்கும் ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின்போது, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் உடனிருந்தனர்.