/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள கலெக்டர் அறிவுரை
/
வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள கலெக்டர் அறிவுரை
ADDED : அக் 08, 2025 10:05 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில் வாழ்வாதார திட்ட செயல்பாடுகளை கலெக்டர் கலைச்செல்வி நேரில் பார்வையிட்டார்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திணையாம்பூண்டி, மேனலுார் ஊராட்சிகளில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், ஆடு, மாடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், 43 லட்சம் ரூபாய் மதிப்பில் 35 நபர்களுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்பட்டன.
அவ்வாறு வழங்கப்பட்ட ஆடு, மாடுகளை பயனாளிகள் பராமரித்து வருவதை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று பார்வையிட்டு, முறையாக வளர்த்து வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள அறிவுறுத்தினார்.
ராவத்தநல்லூர் ஊராட்சியில் மகளிர் திட்டத்தின் வாயிலாக 10 உற்பத்தியாளர் குழுக்களுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதில், மரச்செக்கு எண்ணெய் தயாரித்தல், அப்பளம் தயாரித்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுவரும் பயனாளிகளை நேரில் பார்வையிட்டு, பொருளாதார வளர்ச்சி பெற ஆலோசனை வழங்கினார்.