ADDED : அக் 08, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாங்காடு:மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில், குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, மவுலிவாக்கம் போலீசார், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கண்காணித்தனர்.
அப்போது, குட்கா பொருட்களை விற்ற முகலிவாக்கத்தை சேர்ந்த சேகர், 54, கவிதா, 32, தண்டலத்தை சேர்ந்த குமார், 48, மைக்கேல் ராஜ், 43, மாரிமுத்து, 43, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 15 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.