sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விஜயராகவ பெருமாள் கோவிலில் மார்ச் 4ல் பிரம்மோற்சவம் துவக்கம்

/

விஜயராகவ பெருமாள் கோவிலில் மார்ச் 4ல் பிரம்மோற்சவம் துவக்கம்

விஜயராகவ பெருமாள் கோவிலில் மார்ச் 4ல் பிரம்மோற்சவம் துவக்கம்

விஜயராகவ பெருமாள் கோவிலில் மார்ச் 4ல் பிரம்மோற்சவம் துவக்கம்


ADDED : பிப் 24, 2024 12:32 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புட்குழி:காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழியில், ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம், மார்ச் 4ம் தேதி காலை 6:50 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

உற்சவத்தையொட்டி, தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். இதில், ஏழாம் நாள் பிரபல உற்சவமான தேரோட்டம் மார்ச் 10ல் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர்லஷ்மிகாந்த பாரதிதாசன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

உற்சவம் விபரம்


நாள் காலை மாலை
மார்ச் 4 த்வஜாரோஹணம் ஸிம்ம வாகனம்
5 ஹம்ஸ வாகனம் சூரிய பிரபை
6 கருடசேவை ஹனுமந்த வாகனம்
7 சேஷ வாகனம் சந்திர பிரபை
8 பல்லக்கு யாளி வாகனம்
9 சூர்ணாபிஷேகம் யானை வாகனம்
10 திருத்தேர் உற்சவம்

11 திருப்பாதம்சாடி குதிரை வாகனம்
12 பல்லக்கு விஜயவீரகோட்டி விமானம்
13 திருமஞ்சனம் அவரோஹணம்








      Dinamalar
      Follow us