ADDED : நவ 20, 2024 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில், பல்வேறு திட்டப் பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.
இந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். சிறு, குறு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தனியார் தொழிற்சாலையின் பங்களிப்பு நிதியில், 75 லட்ச ரூபாய் மதிப்பில் சாலை போடும் பணி மற்றும் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர், கலெக்டர் ஆகிய இருவரும் துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் மனோகரன், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய சேர்மன் கருணாநிதி மற்றும் தனியார் தொழிற்சாலை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.