/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் அக்.2ல் நவராத்திரி விழா துவக்கம்
/
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் அக்.2ல் நவராத்திரி விழா துவக்கம்
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் அக்.2ல் நவராத்திரி விழா துவக்கம்
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் அக்.2ல் நவராத்திரி விழா துவக்கம்
ADDED : செப் 24, 2024 07:27 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி உற்சவம், அக்.,2ம் தேதி காலை பூர்வாங்க சண்டி ஹோமத்துடன் துவங்குகிறது. விழாவையொட்டி தினமும் காலையில் காமாட்சி அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரமும், கன்யா பூஜை நடைபெறுகிறது.
இரவு காமாட்சி அம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்து நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருள செய்து சூரசம்ஹார நிகழ்ச்சியும், தீபாராதனையும், பிரபல சங்கீத வித்வான்கள் பங்கேற்கும் சங்கீத கச்சேரிகளும் நடைபெறுகின்றன.
இதில், காமாட்சியம்மனுக்கு முக்கிய நாட்களில் நவராத்திரி வைபவத்தில் லட்சார்ச்சனை மற்றும் சதுர்வேத பாராயணம், சண்டி ஸ்ப்தசதி பாராயணமும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், மணியகாரர் சூரியநாராயணன், காமாட்சி அம்பாள் தேவஸ்தான ஆதின பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.