/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் சமுதாய வளைகாப்பு
/
உத்திரமேரூரில் சமுதாய வளைகாப்பு
ADDED : மார் 17, 2025 12:46 AM

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கர்ப்பிணியருக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, உத்திரமேரூரில் நேற்று நடந்தது. மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன் தலைமை தாங்கினார்.
காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி., செல்வம் முன்னிலை வகித்தார். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, கர்ப்பிணியர் சத்துள்ள உணவை உட்கொள்ளவும், மாதந்தோறும் தவறாமல் பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வளைகாப்பு விழாவில் பங்கேற்ற 200 கர்ப்பிணியருக்கு வளையல் அணிவித்து, மஞ்சள், குங்குமம், தாம்பூலம் அடங்கிய சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பானுமதி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.