/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விடிவதற்குள் மின்விளக்குகள் அணைப்பு காஞ்சி ரயில் நிலையத்தில் பயணியர் அவதி

ADDED : நவ 06, 2024 07:41 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம், காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெருவின் கடைசியில் அமைந்துள்ளது. அன்றாடம், சென்னை, அரக்கோணம், செங்கல்பட்டு, திருப்பதி என, பல்வேறு இடங்களுக்கு இந்த ரயில் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பயணியர் செல்கின்றனர்.
குறிப்பாக, சென்னைக்கு பணிக்காக செல்வோர், ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு, அதிகாலை 5:30 மணிக்கு சென்னை செல்லும் ரயிலில் ஏற வரும் பயணியர், ரயில் நிலையத்தில் இருட்டில் நிற்க வேண்டியுள்ளது.
அதிகாலை 5:30 மணிக்கு, விடிவதற்கு முன்பாகவே, ரயில் நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இதனால், ரயில் வரும் நேரத்தில், ரயில் நிலையம் முழுதும் கும்மிருட்டில் இருப்பது பயணியருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஏற்கனவே, கழிப்பறைகள் முறையாக திறந்து வைக்கப்படுவதில்லை. இந்நிலையில், விடிவதற்குள் மின் விளக்குகளை ரயில்வே துறை ஊழியர்கள் அணைக்கின்றனர். விடிந்த பின் 6:00 மணிக்கு மேல், மின்விளக்குகளை அணைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.