/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் ஊழியர் பற்றாக்குறை குறைதீர் கூட்டத்தில் புகார்
/
மின் ஊழியர் பற்றாக்குறை குறைதீர் கூட்டத்தில் புகார்
மின் ஊழியர் பற்றாக்குறை குறைதீர் கூட்டத்தில் புகார்
மின் ஊழியர் பற்றாக்குறை குறைதீர் கூட்டத்தில் புகார்
ADDED : டிச 19, 2024 08:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் ரயில்வே சாலை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
தண்டலம் மற்றும் புரிசை கிராமங்களில் மின் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட நான்கு விதமான புகார் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு கான வேண்டும் என, மேற்பார்வை செயற்பொறியாளர், மின்வாரிய ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.