/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி :சிதிலமடைந்த மின்கம்பம் புதிதாக மாற்ற கோரிக்கை
/
புகார் பெட்டி :சிதிலமடைந்த மின்கம்பம் புதிதாக மாற்ற கோரிக்கை
புகார் பெட்டி :சிதிலமடைந்த மின்கம்பம் புதிதாக மாற்ற கோரிக்கை
புகார் பெட்டி :சிதிலமடைந்த மின்கம்பம் புதிதாக மாற்ற கோரிக்கை
ADDED : டிச 26, 2024 01:00 AM

சிதிலமடைந்த மின்கம்பம் புதிதாக மாற்ற கோரிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சி, 30வது வார்டு சித்தி விநாயகர் பூந்தோட்டம் பகுதியில், மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மின்கம்பம் எண்: 30ல், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இவ்வழியாக செல்லும் கனரக வாகனம் லேசாக உரசினால், மின்கம்பம் நொறுங்கி விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சித்தி விநாயகர்பூந்தோட்டம் பகுதியில் சிதிலமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.அன்பழகன், காஞ்சிபுரம். தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சீரமைக்க வாரியம் முன்வருமா?
உத்திரமேரூர் -- வந்தவாசி நெடுஞ்சாலையில்உள்ள அம்மையப்பநல்லூரில், கம்பங்கள் நடப்பட்டு, மின்கம்பிகள் வாயிலாக குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அங்குள்ள கம்பம் ஒன்றில் மின்கம்பிகள் தளர்ந்து, தாழ்வான நிலையில் உள்ளன. இதனால், நெடுஞ் சாலையில் செல்லும் வாகனங்கள், முன்னே செல்லும்வாகனத்தை முந்தி செல்ல முயலும்போது, தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மீது உரசி, மின் விபத்துஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மின்துறை அதிகாரிகள், தாழ்வாகசெல்லும் மின்கம்பியை உடனடியாக சீரமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ச.புகழ்வேந்தன், திருப்புலிவனம். பராமரிப்பு இல்லாத பாலத்தில் வளர்ந்துள்ள ஆலமர செடிகள்
மதுரமங்கலம் அடுத்த மேலேரி கிராமத்தில் இருந்து, எடையார்பாக்கம் செல்லும் சாலையோரம், நீர்வரத்து கால்வாய் குறுக்கே உயர்மட்ட தரைப்பாலம் செல்கிறது.
இந்த தரைப்பாலத்தின் இருபுறம் கைப்பிடி சுவரில், ஆலமர செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், பாலம்விரிசல் ஏற்பட்டு, சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆலமர செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - சு.நடராஜன், காஞ்சிபுரம். மீடியன் இரும்பு தடுப்பு சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் மேம்பாலம் அருகே, ஒரகடம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, சர்வீஸ் சாலை மற்றும் மேம்பாலத்தின் மேலே செல்லும் சாலைகளுக்கு மத்தியில் உள்ள மீடியனில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ம் தேதி சர்வீஸ் சாலையில் சென்ற கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, மீடியனில் உள்ள இரும்பு கம்பியின் மீது மோதியதில், தடுப்பு உடைந்து சாலையில் விழுந்தது. இதனால், பாலத்தின் மீதுசெல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் விழுந்துள்ள இரும்பு தடுப்புகளால், விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சேதமான இரும்பு தடுப்புகளை அகற்றி, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- த.சுரேஷ், ஒரகடம். சாலை நடுவே மரண பள்ளம் நெ.சா.துறை கவனிக்குமா?
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் உள்ள ஒரகடம் அடுத்த மாத்துாரில், சமீபத்தில் பெய்த மழையால் சாலை சேதமடைந்து, பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளன.
இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக சாலை நடுவே உள்ள பள்ளத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
எனவே, உயிரிழப்பு ஏற்படும் முன், சேதமான சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.