/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி செய்தி: பஸ் நிலைய கூரை சேதம்: பயணியர் அவதி
/
புகார் பெட்டி செய்தி: பஸ் நிலைய கூரை சேதம்: பயணியர் அவதி
புகார் பெட்டி செய்தி: பஸ் நிலைய கூரை சேதம்: பயணியர் அவதி
புகார் பெட்டி செய்தி: பஸ் நிலைய கூரை சேதம்: பயணியர் அவதி
ADDED : செப் 30, 2025 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உ த்திரமேரூர் பேருந்து நிலையத்திற்கு தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் மக்களை மழை மற்றும் வெயிலின் தாக்கத்திலிருந்து காக்க, 10 ஆண்டுக்கு முன் தகர கூரை அமைக்கப்பட்டது.
தற்போது, பேருந்து நிலைய கூரை பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. மழை நேரங்களில் சேதம் ஏற்பட்டுள்ள கூரையின் வழியே மழைநீர் ஊற்றுகிறது.
இதனால், மழை நேரங்களில் பேருந்து நிலையத்திற்கு வரும் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பேருந்து நிலைய கூரையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்ய, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- எம். சிவசங்கரன். உத்திரமேரூர்.