
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருக்கை வசதி இல்லாத
பயணியர் நிழற்குடை
சு ங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பில், 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு தேவைக்காக இங்கு வந்து செல்கின்றனர்.
சுங்குவார்சத்திரத்தை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள் அரசு பேருந்து வாயிலாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சுங்குவார்சத்திரம் சந்திப்பில், போலீஸ் பூத் அருகில் உள்ள நிற்குடையில், பயணியர் அமர்வதற்கு இருக்கை வசதி இல்லை. பேருந்திற்காக காத்திருக்கும் பெண்கள், வயதானோர் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. நிழற்குடையின் சுற்றுச்சுவரில் சிலர் அமர்ந்து வருகின்றனர்.
தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் பயணியர் நிழற்குடையில், இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்.
- சி. கமலக்கண்ணன், சுங்குவார்சத்திரம்.

