
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடவுப்பாதை சாலையோர பள்ளம்
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கா ஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, கரியன்கேட் ரயில்வே கடவுப்பாதை வழியாக வெள்ளைகேட், கோவிந்தவாடி அகரம், திருமால்பூர், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், கரியன்கேட் ரயில்வே கடவுப்பாதை அருகில், சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மணிகண்டன், காஞ்சிபுரம்.

